#BREAKING: கொரோனாவிலிருந்து மீண்ட அமைச்சர் காமராஜ்..!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து அமைச்சர் காமராஜ் குணமடைந்தார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அமைச்சர் காமராஜிக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து கடந்த மாதம் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025