தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களிலே உள்ளதால், அதற்கான வேலைகளில் ஆளும், எதிர் மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “6 மாதத்தில் விடியல் பிறக்கும்” என்று பதிவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறியது எல்லாம் பகல் கனவு தான்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறிய அவர், வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…