திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ.!
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகளை திறக்கும் போது அப்போது நிலவும் சூழலை பொறுத்து தான் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர், சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் எனவே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து பேசி சம்பள குறைப்பு விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.