அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி…!
தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவினர் அடிதடியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோவில்பெட்டியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் மார்க்கண்டேயன், சின்னப்பன் ஆகியோரும் தங்கள் ஆதரவாளர்களோடு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இவர்கள் இருவரில் யார் முதலில் பேசவேண்டும் என்று ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் மோதலாக மாறியது.மோதலை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயற்சி செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்னர் சண்டை முடிவுக்கு வராததை அடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ அங்கிருந்து புறப்பட்டார்.