நானும் இருக்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.! அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்.!
தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு.
நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மழை நீர் வடிகால் இல்லாத இடங்களில் தான் தற்போது மழைநீர் தேங்கி வருகிறது. அதனையும் சோதனை செய்து பணிகளை மும்முரமாக ஆய்வு செய்து வருகிறோம். மழைநீரை அகற்ற சென்னை மாணாக்கட்சியில் 420 இடங்களில் மின் பம்பு மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேங்கும் மழைநீரால் பாதிக்கப்பட்டால், கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை தங்க வைக்கும் அளவுக்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது எனவும், அவர்களுக்கு தேவையான நல்ல உணவு, குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவும்,
சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக உள்ளோம்.எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
அடுத்ததாக, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிக்கை குறித்து கேட்கப்பட்டபோது, ‘ தனது இருப்பை நிரூபிக்க மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடியுங்கள் என ஏற்கனவே நடைபெற்று பணிகள் நிறைவடையும் வேளையில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.’ என விமர்சனம் செய்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.