சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 22 தலைப்புகளில் சொற்பொழிவரங்கம் நடைபெற்றது.
பொது இடங்களில் ராமர் கோவில் நேரலைக்கு தடை..!
இதற்கிடையில், இன்று மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டிற்கு வருகை தந்தார். அதன்போது கலைஞர், பெரியார், அண்ணா ஆகியோரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். பிறகு இளைஞரணி மாநாடு மேடையில் திமுக இளைஞரணி மாநாட்டு மலரை முதலமைச்சர் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு நினைவுப் பரிசாக வீர வாள், கேடயத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். மேலும், மாநாட்டில் முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…