இளைஞரணி மாநாட்டில் வீர வாள், கேடயத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..!

DMKYouthWingConference

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு  நடைபெற்று வருகிறது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 22 தலைப்புகளில் சொற்பொழிவரங்கம் நடைபெற்றது.

பொது இடங்களில் ராமர் கோவில் நேரலைக்கு தடை..!

இதற்கிடையில், இன்று மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டிற்கு வருகை தந்தார். அதன்போது கலைஞர், பெரியார், அண்ணா ஆகியோரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். பிறகு   இளைஞரணி மாநாடு மேடையில்  திமுக இளைஞரணி மாநாட்டு மலரை முதலமைச்சர் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு நினைவுப் பரிசாக வீர வாள், கேடயத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். மேலும், மாநாட்டில் முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்