ஆதாரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கி காப்பகத்தில் சேர்த்த அமைச்சர் ஜெயக்குமார்!
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு மாஸ்க், உணவு வழங்கியதோடு அவரை காப்பகத்திலும் சேர்த்துள்ளார்.