கமல் பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகிறார். கமலஹாசனை பொறுத்தவரையில், அவர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளையும் விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதில் அதிமுகவை தான் அதிகமாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் மகாபாரதம் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகாபாரதம் பற்றி கமலஹாசன் பேசியது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிக்பாஸ் மூலம் மகாபாரதம் பற்றி பேசி, குறிப்பிட்ட மதத்தின் வாக்கினை பெற வேடம் போடுகிறார் என்றும், அவர் மாற்றி, மாற்றி பேசுபவர். கமல் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியாது.’ என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…