அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி!!

சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 27,587 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வியடைந்தார்.
வாக்கு எண்ணிக்கையில் 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி 63,811 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஜெயக்குமார் 36 ஆயிரத்து 224 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025