அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் வந்து சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து தொடங்கினர்.
போலீசார் தடுத்து நிறுத்தம்
காவல்துறையினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், அனுமதியை மீறி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயல்பவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.
போராட்டம் வாபஸ்
இந்த நிலையில், அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…