திமுக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஒரு பவுன் தங்க மோதிரத்தை வழங்கினார்.
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஒரு பவுன் தங்க மோதிரத்தை வழங்கினார். அவர் சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அகில இந்திய அளவில் சிறந்த முதல்வராக திகழ்கிறார். அவர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 270 வாக்குறுதிகளை ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நிறைவேற்றியுள்ளார். தமிழக தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எல்லா இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது இவ்வாறு பல சாதனைகளை அவர் செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…