குழந்தை திருமணம் செய்தால் வழக்குப் பதிவு – அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை…!

குழந்தை திருமணம் செய்தால் குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நேற்று ஆறு மாவட்டங்களை (தென் மண்டலம்) சேர்ந்த சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், சமூக நல இயக்குநர் டி.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் வி.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ்.வளர்மதி மற்றும் கன்னியாகுமரி,தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் , ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது,அமைச்சர் கீதாஜீவன் கூட்டத்தில் பேசியதாவது:
“குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும்,சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.இதனையடுத்து,குழந்தைகள் காப்பகங்கள்,முதியோர் இல்லங்கள் நடத்துவோர் அதற்கான அனுமதி பெற்றுதான் நடத்த வேண்டும்.
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.குறிப்பாக அவர்கள் படிப்பிற்கான செலவுகள் குறித்த அறிக்கையை அதிகாரிகள் உடனே தயார் செய்து அனுப்ப வேண்டும்”, என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024