அடக்கி வாசிங்க குஷ்பூ.. ‘பிச்சை’ சர்ச்சைக்கு பரபரப்பு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் அமைச்சர்.!
Kushbu : பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என தமிழக அரசு மாதந்தோறும் குடும்பதலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
Read More – 1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…
குஷ்பூவின் பேச்சுக்கு நேற்று முன்தினம் இரவு முதலே சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து நடிகை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில், 1982ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் செயல்படுத்திய இலவச உணவு திட்டத்தை பிச்சை என முரசொலி மாறன் விமர்சித்து இருந்தார். பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்வதை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி என விமர்சித்தார். அப்போதெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என கூறியிருந்தார்.
Read More – பாஜகவில் சரத்குமார்… நள்ளிரவில் நடந்தது என்ன.? அண்ணாமலை விளக்கம்.!
இருந்தும், பிச்சை என கூறிய கருத்தை குஷ்பூ பின்வாங்காததால், அவர் மீது கடும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அமைப்பினர் குஷ்பூவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். மேலும், அமைச்சர் கீதாஜீவன் தனது சமூக வலைதளத்த்தில் குஷ்பூவுக்கு எதிராக கண்டன விடியோவை பதிவிட்டார் .
அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பிச்சை என கூறி நடிகை குஷ்பூ இழிவாக பேசியுள்ளார். தமிழக அரசு 1000 ரூபாயை பிச்சை போடுவதாக கூறி 1.16 கோடி பெண்களை இழிவுபடுத்தியுள்ளார். இங்குள்ளவர்களின் வாழ்ககை முறை என்ன என அறியாத குஷ்பூ, வீட்டில் இருந்து வெளியே வந்து மைக் முன்னாடி பேசுகிறார். நீங்க கோடிகளில் புரள்பவர். உங்களுக்கு இந்த 1000 ரூபாய் பிச்சை காசாக தான் தெரியும்.
Read More – தமிழகத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படாது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.
ஆனால் அதனால் பயன்பெறும் மகளிருக்கு அது மருத்துவ செலவு தொகையாக, சீர் தொகையாக, பெற்ற பிள்ளளைகள் கைவிட்ட போதும் வயதானோருக்கு கிடைத்த வாழ்வாதார தொகை என பலரும் தமிழக முதல்வரை பாராட்டி வருகின்றனர். குஷ்பூவுக்கு தகுந்த பாடத்தை தமிழ்நாட்டு பெண்கள் அளிப்பார்கள். குஷ்பூ நாவை அடக்கி வாசிங்க என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் தமிழக அமைச்சர் கீதா ஜீவன்.
— P. Geetha Jeevan (@geethajeevandmk) March 12, 2024