அமைச்சர் துரைக்கண்ணு மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்.!

Default Image

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு திமுக இளைஞர் பிரிவு செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும், திமுக இளைஞர் பிரிவு செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக வேளாண் அமைச்சர் பாபநாசம் திரு.துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அவரது பிரிவால் வாடும் அதிமுகவினர்- குடும்பத்தார் – நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கொரோனா இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. அனைவரும் எச்சரிக்கையோடு இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin vs eps
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review