தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.எனவே அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,பாமக நிறுவனர் ராமதாஸ் ,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,வேளாண்துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத் துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்! பொதுவாழ்வில் உள்ள அனைவரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும். அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் :
ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,தமிழக வேளாண்துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டிருந்தவர். கடந்த 13-ஆம் தேதி திண்டிவனம் அருகே மகிழுந்தில் சென்ற போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர், உடனடியாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின் பயனாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் :
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் :
தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…