மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்
அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
மறைந்த அமைச்சரின் உடல் அவருடைய சொந்த ஊரான பாபநாசத்திற்கு தஞ்சை எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், எம்.பி. வசந்தகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் உள்ளிட்டோர் ஏற்கனவே பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…