அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்
அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அமைச்சர் துரைகண்ணுவின் மறைவை அறிந்து மிக வருத்தம் அடைந்தேன் என்று தேரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…