1000 ரூபாய் சில்லறை மாத்தி குடுத்துடுவோம்.! அமைச்சர் துரைமுருகன் ருசிகர தகவல்.!
மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை கொடுத்துள்ளோம். தாய்மார்களுக்கு 1000 ரூபாய் சில்லறை மாத்திக்கொண்டு இருக்கோம் விரைவில் கொடுத்துவிடுவோம். என கலகலப்பாக பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்களின் கல்லூரி படிப்பிற்கு உதவியாக ,மாதம் 1000 ரூபாய் உதவி தொகை கொடுப்போம் என உறுதி அளித்தது. அதே போல, குடும்ப தலைவிக்கு 1000 மாதம் கொடுக்கப்படும் என அறிவித்தனர்.
இதில் முதற்கட்டமாக, மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவி தொகை திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. இன்னும் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம் தொடங்கப்படாமல் இருக்கிறது.
இதுகுறித்து அண்மையில் ஒரு மேடையில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், ‘ இப்போது தான் மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவி தொகை கொடுத்துள்ளோம். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது கொடுப்பீர்கள் என கேட்குறீர்களா.? சில்லரை மாத்திட்டு இருக்கோம் விரைவில் கொடுத்துவிடுவோம். அம்மாவுக்கும் 1000 , மகளுக்கும் 1000 ரூபாய் கொடுக்கும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான்’ என கலகலப்பாக பேசியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
இணையம் முழுக்க அமைச்சர் துரைமுருகன் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும், அரசியல் வட்டாரத்திலும் இவரது பேச்சு பேசுபொருளாகியுள்ளது.