காவேரியில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் தான் திறக்கப்பட்டது.! அமைச்சர் துரைமுருகன் தகவல்.!
கடந்த மாதம் காவேரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் கோரிகையை முன் வைப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவேரியில் இருந்து தமிழகதிற்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீர் அளவு திறந்து இருக்க வேண்டும். ஆனால், 2.8 டிஎம்சி தண்ணீர் தான் தமிழக்த்திற்கு வந்துள்ளது. கடந்த மாதமே 6.35 டிஎம்சி தண்ணீர் தரவேண்டியுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்த மாதம் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் தமிழகத்திற்கு வேண்டியுள்ள்ளது. அதனால் தமிழகத்திற்கான தண்நீரை திறக்க கோரி காவேரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தில் கோரிக்கை வைக்க உள்ளோம் எனவும் அதற்காக டெல்லி செல்ல உள்ளோம் எனவும், அப்படியே மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேகதாது பற்றிய கேள்விக்கு அந்த வார்த்தையையே பயன்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ள்ளது எனவும் மேகதாது அணை பற்றி அவர்கள் (கர்நாடக அரசு) கூறினால், நாமும் நமது தரப்பு நியாயத்தை எடுத்துரைப்போம் என அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.