காவேரி விவகாரத்தில் இதே நிலை நீடித்தால் தமிழகத்திற்கு அபாயம்.! டெல்லி சென்று திரும்பிய அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!

Minister Duraimurugan

காவேரியில் இருந்து இதே போல குறைந்த அளவு தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டால் அது ஆபத்து என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். 

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கடந்த மாதம் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆலோசிப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றார். அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களை சந்தித்து பேசினார். அவரிடம் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பினார்.

தமிழகம் திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திற்கு காவிரி நதியில் இருந்து கர்நாடகா அரசு தரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு தோராயமாக ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த மாதம் முதல் கடந்த மூன்றாம் தேதி வரையில் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 2.9 டிஎம்சி தண்ணீர் தான் திறந்து விடப்பட்டுள்ளது. 9.2 டிஎம்சி தண்ணீர் வேறுபாடு உள்ளது.

இதனால் குருவை சாகுபடி கூட தமிழகத்தில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. டெல்டா பயிரை காப்பாற்றுவதற்கு காவிரி நீர் கண்டிப்பாக தேவை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. எனவே இதுகுறித்து காவிரி தீர்ப்பாயம் கர்நாடகா அரசு வலியுறுத்த சொல்லுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் கேட்டுக்கொண்டேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடாமல் இருப்பது சட்டப்படி குற்றம் எனவும் தனது கண்டனத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

குற்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்