Tamilisai Soundarajan - DuraiMurugan [File Image]
South Chennai : தென்சென்னையில் தமிழிசை போட்டியிடுவதை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன்.
தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.
கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டு திமுக எம்பி கனிமொழியிடம் தோல்வி பெற்றார். பின்னர் தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று இருந்தார். தற்போது மீண்டும் பொதுத்தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குகிறார்.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய துரை முருகன் , போயும் போயும் தென் சென்னையிலா தமிழிசை போட்டி போடுறாங்க.? ஐயோ பாவம் தெரிஞ்சிருந்தா நான் தமிழிசைக்கு போன் போட்டு பேசி இருப்பேன் .
நீங்க நிக்க போறீங்கனா வேற எதாவது தொகுதி கூட சொல்லிருகலாம். இந்த தென் சென்னை தொகுதி திமுக ஜெயிக்கிறதுக்காக பொறந்த தொகுதி. அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டார். இங்க உள்ளூர்லேயே ஓணான் பிடிக்க தெரியாத ஒருத்தன் வெளியூரரில் யானை பிடிக்க போனானாம் என கிண்டலாக விமர்சனம் செய்தார் அமைச்சர் துரைமுருகன்.
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…