திமுக கூட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட மின்சாரம்.! பொறியாளரை கடிந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன்.!
திமுக கூட்டத்தில் பாதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மின் பொறியாளரை போனில் அழைத்து அமைச்சர் துரைமுருகன் கடிந்து கடிந்துகொண்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க திமுக முனைந்துள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருந்தார்.இதனை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விழா ஊட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மின்தடை :
அதில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விழா தொடங்குகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது ஜெனரேட்டர் இயக்கவும் தாமதமானது.
நேரில் வந்து பார்க்கணும் :
இதனால், அமைச்சர் துரைமுருகன் உடனடியாக, அங்குள்ள மின்பொறியாளருக்கு போன் செய்து , இங்கு 3 அமைச்சர்கள் விழாவில் இருக்கிறோம். இரண்டு முறை மின்சாரம் தடைபட்டு விட்டது. என கேட்டுள்ளார். அதற்கு அந்த மின் பொறியாளர் , எங்கு மின் தடை என கேட்டதாக தெரிகிறது. உடனே, தன்னை நேரில் வந்து பார்க்குமாறு அமைச்சர் துரைமுருகன் கூறிவிட்டு போனை கொடுத்துவிட்டார். அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் நடந்த இந்த சம்பவம் நேற்று முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.