விரும்பத்தகாத செயலை செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.! துரைமுருகன் பேச்சு.!
ஜெயலலிலதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அறிக்கை தாக்கல். அதன் மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெறும் என பயந்து தான் இபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்கிறார்கள். என தமிழக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டபேரவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாள் கூட்டத்தை புறக்கணித்த இபிஎஸ் இன்று அவரது ஆதர்வாளர்களோடு கலந்து கொண்டார். கலந்துகொண்டது முதலே, எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக தொடர் அமளி சட்டப்பேரவையில் நடந்தது.
இதனை தொடர்ந்து, இபிஎஸ் தரப்பினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் தமிழக அமைச்சரும், திமுக கொறடாவுமான துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசுகையில், ‘ எதிர்க்கட்சி தலைவர் எழுந்து பேச ஆரம்பித்ததும், கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரம் தருகிறோம் என சபாநாயகர் கூறினார். இருந்தும் கேட்காமல், திட்டமிட்டு சபையில் கபளீகரம் செய்துவிட்டு வெளியேறிவிட்டனர். ‘ என குற்றம் சாட்டினார்.
மேலும் துரைமுருகன் குறிப்பிடுகையில், ‘ முதல்வர் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வந்து இருக்கிறார். உண்மையான தமிழனாக இருந்தால், இந்த தீர்மானத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ‘ என தெரிவித்தார் துரைமுருகன்.
அதற்கடுத்ததாக, ‘ அதே போல சட்ட ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய அரசே, தூத்துக்குடி மண்ணில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை அருணா ஜெகதீசன் தாக்கல் செய்ய உள்ளார். அதன் மீதான விவாதம்நடைபெறும். இதற்கெல்லம் பயந்து தான் இபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்கிறார்கள். இது அநாகரீகமாக செயல். அதனால் அமளியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பேரவை விதிகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ என தனது குற்றசாட்டை முன்வைத்தார் அமைச்சர் துரைமுருகன்.