துரை முருகன் : திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் துரை முருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பாக நின்ற அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பாமக சார்பில் நின்ற சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பிறகு 3-வது இடத்தில் நாதக கட்சியின் சார்பாக நின்ற அபிநயா 10,602 வாக்குகள் பெற்றிருந்தார்.
காலையில் இருந்தே திமுக முன்னிலையில் இருந்த நிலையில், திமுகவின் வெற்றி உறுதியான காரணத்தால் இன்று, காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது முதல்வருடன் வந்த அமைச்சர் துரை முருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு, அவர் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாக்க இருக்கிறது .
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…