அவருக்கு இதுதான் வேலை கண்டுக்காதீங்க… அமைச்சர் துரைமுருகன் கடும் விமர்சனம்.!

PM Modi and Devegowda - TN Minister Duraimurugan

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வேலூர், காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கருத்துக்களை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.!

அவரிடம், முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதாதளம் (கர்நாடகா) தலைவர் தேவகவுடா பற்றி கேட்கப்பட்டபோது, தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் சரி, அதற்கு முன்னதும் சரி, தற்போதும் சரி தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தரக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என வைராக்கியத்துடன் இருப்பவர் தேவகவுடா. தமிழகத்திற்கு சாதகமான வார்த்தைகளை பேசவே மாட்டார். அவர் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது தேவகவுடா, மோடி பக்கம் நிற்கிறார். அப்போதுதான் அவரது மகனின் ( கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி) அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்று கருதுகிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவருக்கு இதுதான் வேலை என்று கிண்டலாக பதில் கூறினார் அமைச்சர் துரைமுருகன்.

அடுத்ததாக, அண்ணாமலை மூன்றாவதாக திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறுவது பற்றி அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,  அவர் வெளியிடட்டும். அதை யார் தடுத்தார்கள்.? தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதனை திமுக தனது கூட்டணி கட்சிகளோடு சந்திக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi