மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அமைச்சர் துரைக்கண்ணு அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டார்
அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
காவேரி மருத்துவ வளாகத்தில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் திருஉருவப்படத்திற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தியதிற்கு பின் மறைந்த அமைச்சரின் உடல் அவருடைய சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகே உள்ள ராஜகிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், எம்.பி. வசந்தகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் உள்ளிட்டோர் ஏற்கனவே பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் இப்படி அதிரடியாக இருக்கனும் என ஒரு காலத்தில் பெங்களூர் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இப்போது…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு…
18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும்…
சென்னை : திருச்சி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம்…
சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில்…