அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்தமான கருத்து -அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்தமான கருத்து என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தது.இதனால் முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்றும் , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறி வந்தனர் .இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியது.
செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் முதல்வர் யார் என்பதில் போட்டி கிடையாது. முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. அடுத்த ஆட்சி அதிமுக தான், அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என கூறினார்.இது மீண்டும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில்,முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்தமான கருத்து ஆகும். கட்சியினரை பொறுத்தவரை கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025