#BREAKING: அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கருக்கு கொரோனா..!
அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி லேசான அறிகுறிகள் இருந்ததால் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் கூட அவர் கலந்துகொள்ள வில்லை.
இதைத்தொடர்ந்து, தன்னை தானே வீட்டிலேயே அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.