சென்னையில் சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குழப்பம் நீடிக்கிறது.
சென்னை எழிலகத்தில் சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஊதியம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து போராட்டம் நடைபெற்ற நிலையில், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் கீதா ஜீவன் நேரடியாக சென்று உறுதி அளித்ததாகவும், இதானால் 3 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
அமைச்சர் கீதா ஜீவன் நேரடியாக சென்று சத்துணவு ஊழியர்கள், நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், போராட்டம் வாபஸ் என்ற அறிவிப்பு தொடர்பாக சத்துணவு சங்க நிர்வாகிகளுடன், ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு நம்பிக்கை தரவில்லை என சத்துணவு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குழப்பம் நீடித்து வருகிறது. சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக் கொள்ள ஒரு தரப்பினர் முடிவு செய்திருப்பதாகவும், போராட்டம் நடத்துவதா? முடிவுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்து சத்துணவு ஊழியர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…