அமைச்சர் உறுதி.. சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்? ஒரு தரப்பினர் எதிர்ப்பு!!

Nutrient workers

சென்னையில் சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குழப்பம் நீடிக்கிறது.

சென்னை எழிலகத்தில் சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஊதியம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து போராட்டம் நடைபெற்ற நிலையில், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் கீதா ஜீவன் நேரடியாக சென்று உறுதி அளித்ததாகவும், இதானால் 3 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

அமைச்சர் கீதா ஜீவன் நேரடியாக சென்று சத்துணவு ஊழியர்கள், நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், போராட்டம் வாபஸ் என்ற அறிவிப்பு தொடர்பாக சத்துணவு சங்க நிர்வாகிகளுடன், ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு நம்பிக்கை தரவில்லை என சத்துணவு ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குழப்பம் நீடித்து வருகிறது. சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக் கொள்ள ஒரு தரப்பினர் முடிவு செய்திருப்பதாகவும்,  போராட்டம் நடத்துவதா? முடிவுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்து சத்துணவு ஊழியர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்