பழனி முருகன் கோயில் மின் நிலுவை ரயில் சேவையில் புதிய நவீன ரயில் பெட்டிகள்.! அமைச்சர் நேரில் ஆய்வு.!
பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மின் நிலுவை ரயில் சேவையில் புதியதாக பொருத்தப்பட உள்ள நவீன பெட்டிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாலதண்டாயுதபாணி கோயிலில் (முருகன் கோயில்) வரும் 27ஆம் தேதி குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கால்நட்டுதல் விழா ஆரம்பித்து தினம் தினம் ஒவ்வொரு ஆன்மீக நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இன்று, 89 சன்னதிகளில் கும்பாபிஷேக புனித நீர் பூஜை செய்யப்பட்டு யாகசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மின் நிலுவை ரயில் சேவையில் புதியதாக பொருத்தப்பட உள்ள நவீன பெட்டிகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.