வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!
ரேஷன் பொருட்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் திட்டமானது தேவை இருப்பின் குறிப்பிட்ட பகுதியில் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளர்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது நாகர்கோயில் பாஜக எம்எல்ஏ காந்தி நடமாடும் நியாய விலை கடை பற்றி கேள்வி எழுப்பினர்.
பாஜக எம்எல்ஏ M.R.காந்தி சட்டப்பேரவையில் கூறுகையில், ஏழை மக்கள் காலையில் வேலைக்கு சென்று வேலை முடிந்து வீடு திரும்ப இரவு வரை நேரம் ஆகிறது. அவர்கள் வேலை தவிர்த்து விடுமுறை தினத்தில் ரேஷன் கடைக்கு சென்று பார்த்தல் பல ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் மூலம் டோர் டெலிவரி செய்வதன் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவர் என கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நாகர்கோயில் தொகுதியில் மொத்தம் 31 முழுநேர ரேஷன் கடைகளும், 10 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. 31 ரேஷன் கடைகள் வழக்கமான முறையிலும் , தேவை இருப்பின் ஆட்சியர் உத்தரவின் பெயரில் பகுதிநேர ரேஷன் கடைகள் தேவைப்படும் இடங்களிலும் செயல்படுகிறது.
மாதத்தின் முதல் தேதியில் இருந்து இறுதி நாள் வரையில் அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்கும் வண்ணம் உணவு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் ரேஷன் கடைகள் எந்த இடத்தில் தேவைப்படுகிறது என சரியாக கூறினால் அந்த பகுதியில் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025