நகைகளை வைத்து பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி -அமைச்சர் செல்லூர் ராஜு
நகைகளை வைத்து பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், பயிர்க்கடன் வாங்கி இருப்பவர்கள் நகையை வைத்து வாங்கி இருப்பவர்களுக்கும் தள்ளுபடி தான்.பத்திரம் மட்டும் இல்ல,நகைக்கும் தள்ளுபடி தான்.தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுடன் பேசி முதலமைச்சர் கடனை ரத்து செய்துள்ளார்.உடனடியாக எடுத்த நடவடிக்கை ஆகும்.அடுத்த தேர்தலுக்கு மக்களை ஏமாற்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்..