அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி, மேற்குவங்க முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளால் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம் எனக் குறிப்பிட்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, தமிழக அமைச்சரைக் கைது செய்து பாஜக அரசு மிரட்டப் பார்க்கிறது என தெரிவித்தார். ஏற்கனேவே அமலாக்கத்துறையின் சோதனை குறித்து, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு மத்திய அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தலைமைச்செயலகத்துக்குள் சோதனை நடைபெற்றது குறித்து தனது கண்டன அறிக்கையை தெரிவித்திருந்தார். பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செயல்படுகிறது, இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.</
p>
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…