தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்பரிந்துரை
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார். இதோடு தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் என திமுக பாராளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக் கழகம், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அரசின் விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி விமான நிலையம் இயங்கி வருகிறது.
அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக கொடுத்த பூரணம் அம்மாள்
விரிவாக்கம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் விரைவில் திறக்கப்பட உள்ள தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும். மிகவும் அரிதான திறமையுடையவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். இதழியல், கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் ஆன்மிகம் சார்ந்த துறைகளில் தனித்தன்மையுடன் விளங்கியவர். இந்தியாவின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் உள்பட 5 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மருத்துவர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
புகழ்பெற்ற தென்காசி காசிவிசுவநாதர் கோவிலின் ராஜகோபுரத்தை, 178 அடி உயரத்துக்கு கட்டியமைத்து ஆன்மிக தொண்டாற்றியவர். இத்தகைய நற்குணங்களுடன் சிறந்து விளங்கிய, உலகப் புகழ் பெற்ற சிவந்தி ஆதித்தனார் பெயரை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.