சட்டசபை வரலாற்றில் இதுவே முதன்முறை.! முதல்வர் ஆர்வம்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!
வரலாற்றில் முதன் முறையாக சாரணர், சாரணியர் இயக்க பணிகள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழ்நாடு சாரணர் சாரணிய இயக்கத்தலைவரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் அவர்கள் ஒரு பள்ளியில் சாரணர் சாரணிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்தகொண்டார்.
வழக்கம் போல சாரணர் சாரணிய உடையில் இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ‘ இதுவரை தமிழக சட்டமன்றத்தில் சாரணர் சாரணியர் பணிகள் குறித்து விவாதித்து இல்லை. வரலாற்றில் முதன் முறையாக சாரணர், சாரணியர் இயக்க பணிகள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.’ என தெரிவித்தார்.
மேலும் , ‘ சாரணர் , சாரணியர் இயக்கம் குறித்தும் அதனை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.’ என குறிப்பிட்ட அவர், ‘ மாணவ, மாணவியர்கள் சாரணர், சாரணியர் இயக்கத்தில் கற்றுக் கொண்டதை கிராமப்புறங்களில் அதனை செயல்படுத்த வேண்டும்.’ எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார்.