நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!!

நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு பற்றிய நடிகர் விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

Vijay Sethupathi - Anbil Mahesh

சென்னை: சென்னை கலைவாணரங்கில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் தமிழகத்தில் இருக்கும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில், நல்லக்கண்ணு நூற்றாண்டு வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டது.

அப்பொழுது மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “காலில் செருப்பு, தீபாவளி – பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம் சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன். இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன். இதனால், நல்லக்கண்ணு அவர்களின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row
tamilisai soundararajan about tvk vijay
virender sehwag ms dhoni