நெருங்கும் பள்ளி பொதுத்தேர்வுகள்.! தேர்வு கட்டுப்பட்டு அறையில் அமைச்சர் அன்பில் மகேஷ்.!
பள்ளிப்பருவ பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சோதனை செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
இன்னும் சில வாரங்களில் 10,11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது அதற்கான ஆயத்த பணிகளில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
அன்பில் மகேஷ் ஆய்வு :
பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சென்னை தலைமை தேர்வு கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
பொதுத்தேர்வு அட்டவணை :
நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதே போல, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 14 அன்று தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அடுத்ததாக, 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி நிறைவடைய உள்ளது.