குஷியோ குஷி…நாளை முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!!

Default Image

நெல்லை:தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு,கடந்த சில மாதங்களாகவே பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை நேற்று அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.அப்போது,பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து பேசுகையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல்(நாளை) முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்கவும்,பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
AUS vs IND , KL Rahul - Jaiswal
amaran ott
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar