தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு அந்த பாடப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அரசுப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் பற்றி கேட்கப்பட்டது.
அதற்க்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘ தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் முழுமையாக திட்டமிட்டு மூடப்படுகிறது என்று கூறுவது தவறான கருத்து. அந்த பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளோம்.’என அது குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும், பள்ளி வளாகம் முழுமையாக போதை பொருளற்ற வளாகமாக மாற்ற சிற்பி திட்டம் பயனளிக்கும் எனவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரையில் நீட் பயிற்சி கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…