தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை…!
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள், சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சரிடம் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முன்வைத்தனர்.