மினி சட்டமன்றத் தேர்தல்: 21 தொகுதிகளுக்கான தேர்தலில் என்ன நடக்கும்..? யார் வெல்வார்?

Default Image

அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்னர் அந்தக் கட்சிக்குள் பெரும் பூசல் ஏற்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் சசிகலா அவர்கள் கட்சியை முழுமையாக கைப்பற்ற எண்ணி பல பிரம்மாண்ட சாகச வேலைகளை செய்தார். ஆனால் அதற்குள் அவர் ஜெயிலுக்கு செல்லும் காலம் வந்தது. இதன் காரணமாக தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக சட்டமன்றடத்தில் வாக்களித்தனர். இதன் காரணமாக கட்சித் தாவல் தடைச் சட்டம் அவர்கள் மீது பாய்ந்தது. அப்போது சபாநாயகராக இருந்த தனபால், அவர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.

பின்னர் இரு தரப்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்தது. சபாநாயகர் தனபால் அறிவிப்பு அது செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த 18 பேரும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்னும் தகுதியை இழந்தனர்.

அதன் பின்னர் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் திமுகவின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். மேலும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் விபத்தில் மரணமடைந்தார். அதன் பின்னர் ஓசூர் எம்எல்ஏவாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு ஒன்றில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் 21 சட்டமன்ற இடங்கள் காலியானது.

இந்த 21 சட்டமன்ற இடங்களுக்கும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் ஒரு மினி சட்டமன்ற தேர்தலாககவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது ஆட்சியில் இருக்கும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 115 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் 88 இடங்களுடன் உள்ளது. பெரும்பான்மை வகிக்க மொத்தம் 117 இடங்கள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த 21 இடங்களில் தற்போது நடக்கப்போகும் தேர்தலில் கண்டிப்பாக அதிமுக 10 தொகுதிகளுக்கு மேல் வென்றாக வேண்டும. அவ்வாறு இல்லை எனில் தொங்கு சட்டமன்றம் வந்துவிடும். தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக 10 இங்களையும், தினகரன் தலைமையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5 இடங்களையும் கைப்பற்றி விட்டால் தற்போது உள்ள அதிமுக அவ்வளவுதான், ஆட்சி கலைக்கப்படும் சூழ் நிலைக்கு சென்றுவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்