நெல்லிக்காய் உதிர்வதை போல் தினகரன் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக உதிர்வார்கள்!
அமைச்சர் ஜெயக்குமார், நாஞ்சில் சம்பத் வெளியேறியதுபோல் தினகரனுடன் இருக்கும் மற்றவர்களும் வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார். சென்னை மந்தை வெளியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த அவர், இறகுப் பந்து விளையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு நிகராக கட் அவுட் வைக்கும் தகுதி தினகரனுக்கு இல்லை என்றும் பில்டப் கொடுப்பவர்கள் நீண்டநாள் நிலைக்க முடியாது என்றும் கூறினார். நாஞ்சில் சம்பத்தை தொடர்ந்து நெல்லிக்காய் உதிர்வதை போல் தினகரன் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் இருந்து வெளியேறுவார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.