பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்..!மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பட்டாசு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் காரணமாக, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிலாளர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அதை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.