11ம் தேதி பால் நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
மார்ச் 11 முதல் பால் வழங்குவதை நிறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு.
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதலுக்கான விலையை ரூ.7 உயர்த்தி அறிவிக்காவிட்டால் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு லிட்டர் பாலுக்கு ஆவின் ரூ.30ம், தனியார் பால் நிறுவனங்கள் ரூ.45 வரை தருவதாக தெரிவிக்கின்றனர். பால் கொள்முதல் வியை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஜகோரிக்கை வைத்து வருகின்றனர்
இந்தநிலையில் மதுரை பால் பண்ணையில் பொது மேலாளரை சந்தித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்த வேண்டும் என க்கோரிக்கை விடுத்தனர். எங்களது கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 11-ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்றனர்.