தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 3 முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிருக்கான விலையை உயா்த்தி இருந்தது. அதைத்தொடர்ந்து மேலும் ஒரு தனியார் நிறுவனம் கடந்த 12-ம் தேதி முதல் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியதாக சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணத்தால் பால் மற்றும் தயிர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடா்ந்து ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்ற காரணத்தைக் கூறி இன்று முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயா்த்துவதாக சுற்றறிக்கை மூலம் பால் முகவா்களுக்கு அறிவித்துள்ளன. அதாவது சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.48 லிருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.52 லிருந்து ரூ.56 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டபட்ட பால் ரூ.60 லிருந்து ரூ.62 ஆகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் தயிரின் விலை ஒரு லிட்டர் ரூ.58 லிருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. இதையடுத்து மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயா்த்த முடிவு செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயா்வு என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தன்னிச்சையான பால் விற்பனை விலை உயா்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இனி வரும்காலத்தில் அரசு அனுமதியின்றி விலையை உயா்த்திட தடை விதிக்குமாறும், தமிழக முதல்வரை, பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.
பின்னர் பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என மாடு வளர்ப்பவர்கள் கூறியுள்ளனர். மேலும் டீ கடை தொழிலார்கள் விலை உயரத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லி : புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜுவ்குமார் நேற்றுடன்…
சென்னை : தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரே சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது, இதனால்ஆபரணத் தங்கத்தின் விலை…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய…
திருப்பூர் : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழ்நாட்டு மக்களிடம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
சென்னை : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு…