இன்று முதல் உயர்ந்தது பால் விலை.! ஒரு லிட்டர் பால் இவ்வளவா.? அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

Default Image
  • தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது.
  • ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வு காரணமாக இன்று முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84% சதவிதம் தனியார் பால் நிறுவனங்களும், 16% சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 3 முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிருக்கான விலையை உயா்த்தி இருந்தது. அதைத்தொடர்ந்து மேலும் ஒரு தனியார் நிறுவனம் கடந்த 12-ம் தேதி முதல் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியதாக சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அதில் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணத்தால் பால் மற்றும் தயிர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடா்ந்து ஆரோக்யா, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை உயா்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்ற காரணத்தைக் கூறி இன்று முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயா்த்துவதாக சுற்றறிக்கை மூலம் பால் முகவா்களுக்கு அறிவித்துள்ளன. அதாவது சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.48 லிருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.52 லிருந்து ரூ.56 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டபட்ட பால் ரூ.60 லிருந்து ரூ.62 ஆகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் தயிரின் விலை ஒரு லிட்டர் ரூ.58 லிருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. இதையடுத்து மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயா்த்த முடிவு செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயா்வு என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தன்னிச்சையான பால் விற்பனை விலை உயா்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இனி  வரும்காலத்தில் அரசு அனுமதியின்றி விலையை உயா்த்திட தடை விதிக்குமாறும், தமிழக முதல்வரை, பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

பின்னர் பால் விற்பனை விலை உயர்த்தப்படுவதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என மாடு வளர்ப்பவர்கள் கூறியுள்ளனர். மேலும் டீ கடை தொழிலார்கள் விலை உயரத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்