5 ஆண்டுகளுக்கு பின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது .5 ஆண்டுகளுக்கு பின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும் .கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது .பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து, அலுவலகச் செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்தப்பட்டுள்ளது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…