பால் விலையை தொடர்ந்து ஆவின் நெய் விலை உயர்வு..!
பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது.
பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன்படி ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.580ல் இருந்து ரூ.630க்கு விற்பனை செய்யப்படுகிறது.
500 மி.லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.290 இல் இருந்து ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 மில்லி லிட்டர் நெய் ஐந்து ரூபாயும், 200 மி.லி நெய் 15 ரூபாயும், 500 மி.லி நெய், ரூ.25 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. புதிய விலையில் ஆவின் நெய் இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.